கலா ஓயாவின் 2 வான்கதவுகள் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வான் கதவுகள் இன்று (4) காலை 9 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவதானமாக இருத்தல்
இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை களனி ஆற்றின் நாகலகம் வீதியில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதன்படி, அங்குள்ள அளவீட்டில் நீர்மட்டம் நேற்று (030 மாலை 4 மணியளவில் 4.05 அடியாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
எனினும், மல்வத்து ஓயா பகுதியில் இன்னமும் லேசான வெள்ள நிலை தொடர்வதாகவும், அந்த நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
