Home முக்கியச் செய்திகள் மித்தெனிய போதைப்பொருள் விவகாரம்: பியல் மனம்பேரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

மித்தெனிய போதைப்பொருள் விவகாரம்: பியல் மனம்பேரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

0

மித்தெனியவின் தலாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க லஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபரை நவம்பர் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

தொலைதூர நீதித்துறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்கைப் வழியாக, நீதிபதி மல்ஷா கொடிதுவக்கு முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்ததுள்ளது.

சம்பத் மனம்பேரியின் தடுப்புக் காவல்

மனம்பேரிக்கு கூடுதலாக, சம்பத் மனம்பேரிக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது காவலில் உள்ள சரித் மதுசங்கவை நவம்பர் 12 ஆம் திகதி வரை மேலும் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான சம்பத் மனம்பேரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தற்போது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவரது வழக்கு டிசம்பர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

NO COMMENTS

Exit mobile version