Home இலங்கை அரசியல் ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது: மறைமுகமாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச

ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது: மறைமுகமாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது
கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியின் தேசிய
அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது என்று நாமல் மறைமுகமாகத்
தெரிவித்துள்ளார் என கருத முடிகின்றது.

 அதிபர் தேர்தல்

மொட்டுக் கட்சியில் இருந்து விலகி அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனும் ஏனைய
கட்சிகளுடனும் இணைந்தவர்கள் தமக்குத் தேவையில்லை என்றும், அவர்களுடன் கூட்டணி
ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் நாமல் ராஜபக்ச மேலும்
தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version