Home இலங்கை அரசியல் முக்கிய வாக்குறுதியொன்றை நிறைவேற்ற தயாரான அநுர அரசாங்கம்

முக்கிய வாக்குறுதியொன்றை நிறைவேற்ற தயாரான அநுர அரசாங்கம்

0

அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கத் தயாராகி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.

ஆரம்ப வேலைகள்

இருப்பினும், அரசியலமைப்பு வரைவுக் குழுவை நியமிப்பதோ அல்லது அது தொடர்பான எந்தவொரு ஆரம்ப வேலைகளோ இதுவரை செய்யப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி ஏற்கனவே அந்த திட்டத்தை ஒரு தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version