இலங்கையில் மிகப்பெரிய இடர் வருகின்ற போது மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பாதுகாப்பு படைகளுக்கு சரியான பயிற்சி இல்லை என்பதை இந்தப் பேரிடர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறிப்பாக அமெரிக்காவினதும், இந்தியாவினதும் மற்றும் ஏனைய நாட்டுப் படைகள் வந்து தான் இந்த நாட்டில் இருக்கின்ற மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற அத்தியாயம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (18.12.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய இடர் மற்றும் அதனூடான விளைவுகள் மக்களைப் பெருமளவு பாதித்திருக்கின்றது.
இயற்கையை இந்த நாடு சரியான முறையில் பேணவில்லை. இயற்கைக்கான பாதுகாப்புக்களையும் முன்னறிவிப்புக்களையும் இந்த நாட்டினுடைய தலைவர்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளாமையும் தற்கால அரசாங்கம் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாமையும் இந்த அனர்த்தத்திற்கு காரணமாகும்.
ஒரு நாட்டினுடைய படை என்பது இராணுவம், கடற்படை,
விமானப் படை, காவல்துறை என்பது ஒரு இடர்வருகின்ற போது எவ்வாறு செயற்படுதல் என்ற முழுமையான பயிற்சியையும் பங்கையும் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இந்த நாட்டில் அவர்கள் செயற்பட்டிருந்தாலும் கூட அந்த செயற்பாட்டிற்குரிய திறன் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றது.” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/_LFkR_k96VY
