Home இலங்கை சமூகம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கத்தின் சதி நடவடிக்கை – வலுக்கும் சர்ச்சை

மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கத்தின் சதி நடவடிக்கை – வலுக்கும் சர்ச்சை

0

சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும்போது, ​​தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி முதல் எதிர்வரும் 21 திகதி வரை கூரை சூரிய மின்கலங்களை அணைக்குமாறு மின்சார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

மின் கட்டமைப்பு

தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் மின்சார தேவை குறைவாக இருப்பதால், பிரதான அமைப்பின் சமநிலையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மின்சார சழபதெரிவித்துள்ளது.


மின்சார சபை

குறைந்த மின் தேவை உள்ள நேரத்தில் அதிகப்படியான மின்சாரம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட மின் சமநிலையின்மை காரணமாக பெப்ரவரி 9 ஆம் திகதி முழு நாட்டில் மின்சாரம் தடை ஏற்பட்டதென மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அமைப்புடன் இணைக்கும் போது செயல்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அமைப்பு இல்லாததே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன சுட்டிக்காட்டுகிறார்.

NO COMMENTS

Exit mobile version