Home இலங்கை சமூகம் 70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள தொடருந்து சேவை : வெளியான தகவல்

70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள தொடருந்து சேவை : வெளியான தகவல்

0

நாட்டில் தொடருந்து சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடருந்து திணைக்களத்தின் (Sri Lanka Railways) புதிய பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர (Dhammika Jayasundara) நேற்று (26) பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களுக்கு நன்றி

இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக என்னை மீண்டும் நியமித்ததற்காக அமைச்சரவை அமைச்சர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில், மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நிறுவனமாக தொடருந்து துறையை மாற்ற வேண்டும். மக்களுக்கு உகந்த சேவையை வழங்க வேண்டும்.

தொடருந்து துறை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு முக்கிய நிறுவனமாகும்.

அரசாங்கத்தின் புதிய கொள்கைகளின்படி, நாளாந்த பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் தொடருந்து சேவையை 70 சதவீதமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

தொடருந்து துறைக்குள் சில நெருக்கடிகளும் சிக்கல்களும் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்தி செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version