Home இலங்கை அரசியல் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – ராஜபக்சர்கள் திட்டம் அம்பலம்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – ராஜபக்சர்கள் திட்டம் அம்பலம்

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது நாமல் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதியாக்கும் முயற்சி செயல்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த காலகட்டத்தில், நாங்கள் அமைதியாக மாவட்டங்களுக்குச் சென்று, கிராமம் கிராமமாக திட்டத்திற்குச் சென்று, நாமல் ராஜபக்ஷவுடன் இந்த தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.

அடுத்த ஜனாதிபதி

இந்த நாட்டின் அடுத்த தலைவர் நிச்சயமாக நாமல் ராஜபக்ஷ தான் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்களும் அப்போதே அப்படித்தான் சொன்னோம்.

இன்றைய திகதிக்குள், இந்த நாட்டு மக்கள் தற்போதைய ஜனாதிபதியின் செயல்பாடுகளையும், தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொள்கிறார்கள்.

எனவே, இந்த நாட்டிற்காக உழைத்த தலைவர் மகிந்த ராஜபக்ச ஆவார். இந்த நாட்டில் நிலவிய போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரும் அவரே.

உள்ளூராட்சி தேர்தல்

எனவே, மகிந்த ராஜபக்ஷ முகாமின் அடுத்த தலைவராக இளைஞர் தலைவர் நாமல் ராஜபக்ஷவை வைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த உள்ளூராட்சி தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கான எங்கள் திட்டம் உருவாகும். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் ஆரம்ப மட்டத்திலிருந்து தயார் செய்து வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

NO COMMENTS

Exit mobile version