ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து
செயற்படுவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் முக்கிய
உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பொது தேர்தலில் போட்டியிட்ட சிறிநேசன் தலைமையிலான
அணி மற்றும் தமது கட்சியில் இருந்து பிரிந்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அணியினர், ரெலோ கட்சியினர் என பல்வேறு அமைப்பினரையும்
இணைத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டியெழுப்புவதற்கு
தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சி
இந்தநிலையில் சில அணியினரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் உள்வாங்கும்போது
தற்போது இணைந்து செயற்படுகின்ற கட்சிகளுக்கு ஆட்சேபனைகள் இருக்கும் பட்சத்தில்
அவர்கள் வெளியேறுவது தொடர்பில் தாம் கரிசனை கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் தமது கூட்டணியை பொறுத்தவரை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதும் அதன் ஊடாக
தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சியாக பரிணமிப்பதுமே நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர், பிரச்சார செயலாளர் ஆகியோர் நியமகிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.