Home இலங்கை அரசியல் 2030 இல் குறைக்கப்படும் இராணுவத்தினர் : ஜனாதிபதி அறிவிப்பு

2030 இல் குறைக்கப்படும் இராணுவத்தினர் : ஜனாதிபதி அறிவிப்பு

0

2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவம் 100,000 ஆகவும், கடற்படை 40,000 ஆகவும், விமானப்படை 18,000 ஆகவும் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake ) தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (28.02.2025) நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பணிபுரிபவர்களின் அளவு குறைத்த போதிலும், அதனைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆயுதங்கள்

இராணுவத்திற்குச் சொந்தமான ஏராளமான விமானங்கள், இராணுவ ஆயுதங்கள் மற்றும் கப்பல்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளன, மேலும் இதுபோன்ற சூழ்நிலை நாட்டிற்குச் சாதகமாக இல்லை.

தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உபகரணங்களை வழங்குவதும், மேம்பட்ட சிந்தனை கொண்ட தொழில்முறை இராணுவமாக அதை மாற்றுவதும் தனது அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையான இராணுவமாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version