இந்தியாவின் (India) – குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்தின் போது விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட பயணிகள் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Praying for everyone. 🙏🏻#planecrash #Ahmedabad pic.twitter.com/qyaD0Knh4b
— Dipal_trivedi (@Dipaltrivedi101) June 12, 2025
https://www.youtube.com/embed/OxHoQlm7Tn8
