சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளராக கடமையாற்றி வந்த சிறைச்சாலைகள் அத்தியட்சகர் காமினி பி திஸாநாயக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை பதில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதவி விலகல் மற்றும் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மேலும் பல்வேறு பதவி நிலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
