Home உலகம் இந்தியாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 4 பேர் படுகாயம்

இந்தியாவில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 4 பேர் படுகாயம்

0

மும்பையிலிருந்து (Mumbai) –  ஹைதராபாத்துக்கு (Hyderabad) சென்று கொண்டிருந்த தனியார் உலங்கு வானூர்தியொன்று புனேவில் (Pune) வைத்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்துள்ள நிலையில் உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

சீரற்ற வானிலை

சீரற்ற வானிலை காரணமாகக் குறித்த உலங்கு வானூர்தியைத் தரையிறங்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்ர்.

Source: https://ibctamil.com/article/plane-crashes-in-pune-1724604486

NO COMMENTS

Exit mobile version