Home முக்கியச் செய்திகள் பொலன்னறுவையில் கால்வாயில் கவிழ்ந்து வான் விபத்து

பொலன்னறுவையில் கால்வாயில் கவிழ்ந்து வான் விபத்து

0

பொலன்னறுவை ZD பிரதான கால்வாயில் கவிழ்ந்து வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (13) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி

விபத்தின் போது வானில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் காயமடைந்து மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version