Home இலங்கை அரசியல் அரச ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடும் அரசு – எழுந்துள்ள கண்டனம்

அரச ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடும் அரசு – எழுந்துள்ள கண்டனம்

0

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 36 வீதத்தினால் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த குற்றச்சட்டை சுமத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் எண்ணிக்கை

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஐந்தரை இலட்சத்தினால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனனையும் இதுவரையில் வெளியிடவில்லை. 

NO COMMENTS

Exit mobile version