Home முக்கியச் செய்திகள் ரி20 வரலாற்றில் மோசமான சாதனையொன்றை படைத்த இலங்கை வீரர்

ரி20 வரலாற்றில் மோசமான சாதனையொன்றை படைத்த இலங்கை வீரர்

0

சர்வதேச ரி20 கிரிக்கெட் களத்தில் அதிக தடவைகள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக (Dasun Shanaka) பெற்றுள்ளார்.

அதன்படி, நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

12 தடவைகள்

இந்த நிலையில், தசுன் விளையாடிய  ரி20 சர்வதேசப் போட்டிகளில் 12 தடவைகள் ஓட்டம் பெறாமல் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக 80 போட்டிகளில் 10 முறை ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த சாதனையை முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் (Tillakaratne Dilshan) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version