முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாக ஊடகங்கள்
வெளியிட்ட செய்திகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆணித்தரமாக மறுத்துள்ளார்.
இந்த செய்திகள் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்ட அவர் பொறுப்பானவர்கள் அத்தகைய
ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
மருத்துவமனையில் சந்தித்தவில்லை
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர்,
இந்த விவகாரம் குறித்து
தனது அலுவலகம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதுபோன்ற கூற்றுகள் நேரில் கண்ட சாட்சிகள் அல்லது புகைப்படங்கள் போன்ற
நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், சரிபார்ப்பு இல்லாமல்
செய்திகளை புனைவதை விமர்சித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமராக தமது நடவடிக்கைகள் அவதானிக்கப்படுகின்ற நிலையில் , ரகசியமாக அத்தகைய
வருகையை மேற்கொள்வது சாத்தியமில்லை என்றும் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.
அரசியல் தலையீடு
இந்தக் கூற்றை முதலில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரிடம் அதன்
நம்பகத்தன்மையை பகிரங்கமாக நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்தார்.
ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக
உள்நோக்கம் கொண்டவையா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், இந்த
விவகாரம் நடந்து கொண்டிருக்கு நீதித்துறை செயல்முறையின் ஒரு பகுதி என்பதை
மீண்டும் வலியுறுத்தினார்.
அரசியல் தலையீடு இல்லாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான
அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
