Home இலங்கை அரசியல் பிரதமர் ஹரினி சீனாவிற்கு விஜயம்

பிரதமர் ஹரினி சீனாவிற்கு விஜயம்

0

பிரதமர் ஹரினி அமரசூரிய, இன்று இரவு சீனாவிற்கு விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

பிரதமர் பீஜிங்கில் நடைபெறவுள்ள “பெண்கள் 2025” உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இருதரப்பு சந்திப்புகள்

இம்மாநாடு “ஒரே பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான முன்னேற்றத்திற்கான புதிய மற்றும் விரைவான செயற்பாடு” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

இம்மாநாடு சீன மக்கள் குடியரசு அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பு (UN Women) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

பிரதமர் அமரசூரிய மாநாட்டில் முக்கிய உரையாற்றுவதுடன், பல முக்கிய இருதரப்பு சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கபப்டுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version