Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரி தொடர்பில் பிரதமர் அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரி தொடர்பில் பிரதமர் அதிர்ச்சித் தகவல்

0

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி (Jaffna National College of Education) இருக்கின்ற நிலையைப் பார்க்கும் போது கவலையளிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றில் இடம்பெறும் வரவு செலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தற்போது ஆசிரியர் சேவையில் இருக்கின்ற ஆசிரியர் வளத்திற்கு அப்பாற்பட்டு கல்வியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பீடங்கள் ஊடாக பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்கள் தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தியிருக்கின்றோம்.

கல்வியற் கல்லூரிகள் இருக்கின்ற நிலையைப் பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. பொலன்னறுவை, யாழ்ப்பாணம் போன்ற கல்வியற் கல்லூரிகளைப் பார்வையிடச் சென்றேன்.

எதிர்காலத்தில் ஆசிரியர்களாக வரக்கூடிய அங்கிருக்கின்ற மாணவர்கள் எந்த வசதியும் இல்லாமல் இருக்கின்றனர்.

சரியான விடுதி வசதிகள் இல்லை, குடிநீர் வசதிகள் இல்லை.

பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பற்றிக் கதைக்கின்றோம்.

படிப்பிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு இன்னமும் கரும்பலகை மாத்திரமே இருக்கின்றது. சரியான மின்சார வசதிகள் இல்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை.

இந்த நிலையில் பாடசாலைகளுக்காக 11, 000 மில்லியனை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/iYs_FaM1jBo

NO COMMENTS

Exit mobile version