Home இலங்கை கல்வி புதிய கல்வி சீர்திருத்தம்.. ஆளுநர் வெளியிட்ட தகவல்

புதிய கல்வி சீர்திருத்தம்.. ஆளுநர் வெளியிட்ட தகவல்

0

வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள்
ஆதரிக்கின்றோம் என
நம்புகின்றேன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம்
தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி,
தொழிற்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தலைமையில், வடக்கு மாகாண
பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (02.08.2025)
நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஆளுநர், “நாட்டின் பெருமைமிகுந்த மற்றும் மீள்தன்மை கொண்ட
எங்கள் பிராந்தியத்துக்கு உங்களை வரவேற்கின்றேன். தேசிய ஒற்றுமை, சம வாய்ப்பு
மற்றும் எந்த மாணவனும், எந்தப் பாடசாலையும், எந்த மாகாணமும்
பின்தங்கியிருக்காத எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புக்கான
உங்கள் செய்தி மிகப்பெரியது.

நிகழ்ச்சி நிரல் 

இன்று, வடக்கு மாகாண மாணவர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும்
நம்பிக்கையைத் தரும் ஒரு துணிச்சலான கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை
முன்னெடுப்பதில் உங்கள் தொலைநோக்குத் தலைமையை நாங்கள் பாராட்டுகின்றோம்.

ஒவ்வொரு மாணவனும் தங்கள் கல்வியை முடிக்கவும், அவர்கள் விரும்பும்
எதிர்காலத்தைத் தொடரும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான
ஒருங்கிணைந்த தொழில் மற்றும் கல்விப் பாதைகளுடன் கல்வி முறையை மறுசீரமைத்தல்
சிறப்பானது.

பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை பரீட்சைப்புள்ளிகளுடன் சமநிலைப்படுத்தும்
மிகவும் நெகிழ்வான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் மீதான
தேவையற்ற போட்டி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

எண்ணிமப்படுத்தலை (டிஜிட்டல் மயமாக்கல்) புகுத்துவதன் மூலம் வடக்கு மாகாணம்
போன்ற கல்வி இடைவெளிகள் அதிகமாகவுள்ள மாகாணங்கள் மிகப்பெரிய நன்மையடையும்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version