Home இலங்கை அரசியல் இலங்கையின் ஐந்து விளையாட்டு வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்த பிரதமர் உத்தரவு

இலங்கையின் ஐந்து விளையாட்டு வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்த பிரதமர் உத்தரவு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் 5 விளையாட்டு வசதிகளை பொதுமக்களுக்கு வழங்க பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு, மாத்தளை, பிங்கிரிய மற்றும் ஓமந்தை ஆகிய இடங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து விளையாட்டு மைதானங்களை வழமையான முறையின்றி, பொதுமக்களுக்காக திறந்து வைக்குமாறு, பிரதமர் மற்றும் பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரிணி அமரசூரிய, விளையாட்டுத்துறை பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த திட்டங்கள் ஒகஸ்ட் பிற்பகுதியிலும் செப்டெம்பர் ஆரம்பத்திலும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் ஊடகப்பிரிவின் அறிவிப்பு 

புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள துறைகளின் தலைவர்களுடனான தனது முதல் சந்திப்பின் போது, பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

1. கொழும்பில் ஒலிம்பிக் நிலை நீல பொலிடன் ஹொக்கி எஸ்ட்ரோடர்ஃப். (The Olympic-Level Blue Polytan Hockey AstroTurf in Colombo.)

2. மாத்தளையில் ஒலிம்பிக் லெவல் ப்ளூ பொலிடன் ஹொக்கி எஸ்ட்ரோடர்ஃப்.( The Olympic-Level Blue Polytan Hockey AstroTurf in Matale.
)

3. பிங்கிரியவில் உள்ள வடமேற்கு விளையாட்டு வளாகத்தில் உள்ள 50 மீற்றர் நீச்சல் தடாகம்.( The 50-meter Swimming Pool at the North Western Sports Complex in Bingiriya.)

4. ஓமந்தையில் உள்ள வவுனியா மாவட்ட விளையாட்டு திடலில் 25 மீற்றர் நீச்சல் தடாகம்.(The 25-meter Swimming Pool at the Vavuniya District Sports Complex in Omanthai)

5. ஓமந்தையில் உள்ள வவுனியா மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள பல்விளையாட்டு உள்ளக அரங்கம்.( 5. The Multi-Sport Indoor Stadium at the Vavuniya District Sports Complex in Omanthai) என்பனவே பொதுமக்களுக்காக திறந்து விடப்படவுள்ளன.

இந்தநிலையில், அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க பொது நிதியை அங்கீகரித்து, இந்த வசதிகளை மிக உயர்ந்த தரத்தில் பராமரிக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைப் பாதுகாக்கவும் உதவுமாறு விளையாட்டு ஆர்வமுள்ள இலங்கையர்களை திணைக்களம் அழைப்பதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version