டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விசேட நாடாளுமன்ற அமர்வின் இரண்டாம் நாளான இன்று (19) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான இன்றைய (19.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளன.
அதன்படி காலை 09.30 முதல் 09.45 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 09.45 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 10.00 முதல் மாலை 5.30 வரை 2026 ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இல. 01 (தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களம்) அங்கீகரிக்கப்படவுள்ளது.
https://www.youtube.com/embed/jwVooU6moMM
