Home இலங்கை சமூகம் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய திட்டம்

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய திட்டம்

0

நாட்டிலுள்ள வீதி சமிக்ஞை விளக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கும் வரையில், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைப் போக்குவரத்து காவல்துறையினர் கையாளவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasooriya) பணிப்புரையின் பேரில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாகப் பிரதான நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சமிக்ஞை விளக்கு அமைப்பு

அத்துடன், அதிக வாகன நெரிசல் நிலவும் காலப்பகுதிக்கு ஏற்றவாறு சமிக்ஞை விளக்கு அமைப்பு மாற்றியமைக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவற்றைத் திருத்தியமைக்கும் வரையில் குறித்த விளக்குகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டினை போக்குவரத்து காவல்துறையினரைக் கொண்டு முன்னெடுக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version