Home முக்கியச் செய்திகள் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

 முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்பவர்களை சோதனையிடுவதற்கு காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அத்தகைய நபர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி சரிபார்க்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது, அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக முகத்தை மூடும் தலைக்கவசம் அணிந்திருந்தவர்களால் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version