புதிய இணைப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் “நமக்காக நாம்“ எனும்
தொனிப்பொருளில் தேர்தல் பிரசாரத்தை இன்று அம்பாறை மாவட்டத்தில்
முன்னெடுத்திருந்தார்.
பொது வேட்பாளர் பிரசாரத்தை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் பல்வேறு
பகுதிகளில் காவல்துறையினர் அவருடன் முரண்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் பிரசாரத்தை பெரிய நீலாவணை முருகன் கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்த போது பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பு
பின்னர் மற்றுமொரு பிரசார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் போது அங்கு வந்த பெரிய நீலாவணை காவல் நிலைய
பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இடையூறினால் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கல்முனை ஆர்.கே.எம் சந்தி, கல்முனை தரவை பிள்ளையார்
முன்றல் உள்ளிட்ட காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதிகளிலும் பிரசாரத்தின் போது இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு
தரப்பினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அம்பாறையில் (Ampara) தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.
கல்முனை – நீலாவணை பகுதியில் சற்று முன்னர் காவல்துறையினர் இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் இடையூறு
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran)தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (09) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கிழக்கில் பொதுவேட்பாளருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் தேரதல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/OuNcDcYllkc