Home இலங்கை சமூகம் விபத்துக்களை குறைக்க கிளிநொச்சி காவல்துறையினர் எடுத்துள்ள தீர்மானம்

விபத்துக்களை குறைக்க கிளிநொச்சி காவல்துறையினர் எடுத்துள்ள தீர்மானம்

0

விபத்துகளை குறைப்பதற்கு கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறையினர் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி கசாயம் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால், பல வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.

கொத்தமல்லி கசாயம்

இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து காவல்துறையினர் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு உறக்க நிலையை தணிப்பதற்கு கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் கிளிநொச்சி காவல் நிலையம் முன்பாக வீதி போக்குவரத்து காவல்துறையினர் இவ்வாறான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு அம்சம் என வாகன சாரதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/police-give-coriander-tea-to-motorists-1728035648

NO COMMENTS

Exit mobile version