Home சினிமா நடிகர் கிருஷ்ணா கைது.. அவருக்கு எதிராக சிக்கிய ஆதாரம் இதுதான்

நடிகர் கிருஷ்ணா கைது.. அவருக்கு எதிராக சிக்கிய ஆதாரம் இதுதான்

0

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது ஆனார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்து நடிகர் கிருஷ்ணா இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார்.

தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி கண்டுபிடித்தனர். நெற்றில் இருந்து அவரிடம் மிக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனக்கு உடலில் பல பிரச்சனைகள் இருப்பதால் போதைப்பொருள் எல்லாம் பயன்படுத்த முடியாது என அவர் விளக்கம் கொடுத்ததாக தகவல் வெளியானது.

கைது

தொடர்ந்து இரண்டு தினங்களாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று கைது செய்து இருக்கின்றனர். அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை, மருந்துகள் எடுத்து வருகிறேன் என கூறினாலும், அவர் போதைப்பொருள் வாங்க செய்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாக சிக்கிக்கொண்டார் என தகவல் வந்திருக்கிறது.

மேலும் சப்ளை செய்த கெவின் என்பவருடன் அவர் வாட்சப்பில் பேசியதும் ஆதாரமாக சிக்கியிருக்கிறது.

அவர் வீட்டிலும் தற்போது தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மாத்திரைகளை பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார். 

Source: https://cineulagam.com/article/actor-krishna-arrested-in-drugs-case-1750931133

NO COMMENTS

Exit mobile version