Home சினிமா அப்பா அடி வெளுத்துவிடுவார், அம்மா தடுக்கவே மாட்டார்.. விஜய் சேதுபதி குறித்து ஓப்பனாக சொன்ன மகன்

அப்பா அடி வெளுத்துவிடுவார், அம்மா தடுக்கவே மாட்டார்.. விஜய் சேதுபதி குறித்து ஓப்பனாக சொன்ன மகன்

0

விஜய் சேதுபதி 

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக தற்போது அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே, சூர்யா தன் அப்பாவுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆனால், இந்த படத்தில் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது, அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 4 – ம் தேதி வெளியாக உள்ளது.

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ‘ஜன நாயகன்’ பட இயக்குநர்.. வேற லெவல் தகவல்

ஓபன் டாக் 

இந்நிலையில், விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் அவரது மகளை அடிக்கவே மாட்டேன். ஆனால், மகன் சூர்யாவை போட்டு வெளுத்து வாங்கிவிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது, இது குறித்து சூர்யா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” அப்பா என்னை கராத்தே கிளாஸ், பாக்ஸிங் கிளாஸுக்கெல்லாம் போகச் சொல்வார், நான் போகமாட்டேன் என அடம்பிடிக்கும் போது அடி வெளுத்துவிடுவார். அப்போது அம்மா நல்லா அடி வாங்கட்டும் என வேடிக்கை பார்ப்பாங்க” என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version