செயலாளர்கள் பிரச்சினை உள்ள 5 அரசியல் கட்சிகளை இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
சில அரசியல் கட்சிகளின் இரண்டு அல்லது மூன்று செயலாளர்கள் இருப்பதாக தெரியவந்த நிலையில், குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடிய போதிலும், பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் எட்டப்படாத நிலையில், ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் ஐந்து கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
இதேவேளை, குறித்த ஐந்து கட்சிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுமார் பதினைந்து அரசியல் கட்சிகளின் அடையாள மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அண்மைய நாட்களில் அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து தீர்வு காணப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.