Home இலங்கை அரசியல் வவுனியாவில் காவல்துறையின் அராஜகம்: சபையில் அறிவித்த எம்பி அர்ச்சுனா!

வவுனியாவில் காவல்துறையின் அராஜகம்: சபையில் அறிவித்த எம்பி அர்ச்சுனா!

0

பிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் காவல்துறையினர் தனியார் காணிகளை அடாத்தாக கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிப்பு

இதேவேளை, இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இன்றையதினம் கூட காவல்துறையினர் அங்கு சென்று எல்லை அமைத்து கொண்டிருப்பதாகவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த விடயத்தை பொதுபாதுகாப்பு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/OsZKZ05-m2s

NO COMMENTS

Exit mobile version