Home முக்கியச் செய்திகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தகவல் வழங்கும் காவல்துறை : எதிர்த்து மக்கள் போராட்டம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தகவல் வழங்கும் காவல்துறை : எதிர்த்து மக்கள் போராட்டம்

0

கெக்கிராவையில் உள்ள மொரகொல்லாகம( Moragollagama) கிராம மக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு வழங்கிய பின்னர் தாம் வழங்கிய தகவல்களை காவல்துறையினர் கடத்தல்காரர்களுடன் பகிர்ந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, காவல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து, அந்தக் குழு அனுராதபுரத்தில் உள்ள உதவி காவல்துறை மா அதிபர் (டி.ஐ.ஜி) அலுவலகத்திற்குச் சென்று முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

மேலும், வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் மற்றுமொரு முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை 

கிராமத்தில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரரின் தாக்குதலில் காயமடைந்த மொரகொல்லாகம கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தற்போது அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version