Home இலங்கை அரசியல் தமிழ் பொதுவேட்பாளரின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு

தமிழ் பொதுவேட்பாளரின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு

0

அம்பாறை – மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் பொதுவேட்பாளரின் பிரசார நடவடிக்கைக்கு பொலிஸாரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தழுவிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையையை தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பில் வைத்து இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களிடம், வேட்பாளரின் உத்தியோகபூர்வ வாகனம் தவிர்ந்த வேறு எந்த வாகனத்திலும் சுவரொட்டிகள் காட்சிபடுத்த கூடாது என பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளருக்கு ஆதரவு

மேலும் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கட்சி சின்னம் காணப்பட்ட உடைகளை அணிந்திருந்த சிலருக்கு அவற்றை அணிந்து செல்லவேண்டாம் என பொலிஸாரால் அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு செய்தல் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version