மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சைக்கான பிரதான நிலையத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (28) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
57வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான நிலையமாக
செயற்பட்டுவரும் நிலையில் அங்கு பாதுகாப்பு கடமையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில், கடமையிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்
உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.