Home இலங்கை சமூகம் பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்

பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்

0

களுத்துறை வடக்கு காலி வீதியில் சக்கரம் கழன்று விழுந்த யாசகருக்கு உதவிய பொலிஸ் அதிகாரியின் செயல் நெகிழ வைத்துள்ளது.

கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சக்கரத்தை சரி செய்து சக்கர நாற்காலியை தள்ளி உதவி செய்தார்.

களுத்துறை போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் சமந்திலக என்பவரே இவ்வாறு உதவியுள்ளார்.


நெகிழ்ச்சி செயல்

மாற்றுத்திறனாளியான யாசகர் வாதுவ பகுதியிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற வேளையில் சக்கர நாற்காலியில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அந்த வழியால் பலர் பயணித்த போதும் எவரும் உதவி செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பொலிஸ், யாசகருக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version