Home முக்கியச் செய்திகள் கடமை நேரத்தில் மதுபோதையில் தூங்கி வழிந்த காவல்துறையினர் : ஆரம்பமானது விசாரணை

கடமை நேரத்தில் மதுபோதையில் தூங்கி வழிந்த காவல்துறையினர் : ஆரம்பமானது விசாரணை

0

சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் குழு கடமைநேரத்தில் மதுபோதையில் ஒரு இடத்தில் ஒழுங்கற்ற முறையில் தூங்குவதைக் காட்டும் காணொளி வைரலாக பரவியது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பதில் காவல்துறை மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

பதில் காவல்துறை மா அதிபர் அதிருப்தி

அதிகாரிகளின் நடத்தை குறித்து அந்தந்த பிரிவுகளில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு பதில் காவல்துறை மா அதிபர் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும், இதுபோன்ற தவறான நடத்தைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version