Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தலை கவனத்திற்கொண்டு அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு பாதுகாப்பு வழங்க இரண்டு பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 பொலிஸ் பாதுகாப்பு 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்விதான தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனடிப்படையிலேயே தற்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version