Home இலங்கை சமூகம் யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சட்டவிரோத நிதி சேகரிப்பு கும்பல்

யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சட்டவிரோத நிதி சேகரிப்பு கும்பல்

0

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் ஒன்று காவல்துறையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள்
உள்ளதாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரகசிய தகவல்

அத்தோடு, அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை எனவும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

இந்தநிலையில், குறித்த கும்பல் நேற்று (06) யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நிதி சேகரிப்பு

இதையடுத்து, குறித்த
குழுவில் இருந்த மூவரையும் அழைத்துச் சென்ற யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இனிமேல் இவ்வாறான சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என
கடுமையாக எச்சரித்த பின்னர் காவல்துறையினர் அவர்களை விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version