Home இலங்கை அரசியல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை கடந்த 21ம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

குழு நியமனம்

இந்நிலையில் குறித்த அறிக்கையை ஆராய்ந்து பார்க்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாகும்.

NO COMMENTS

Exit mobile version