Home இலங்கை சமூகம் யாழ்.வடமராட்சியில் மண் அகழ்வு இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்ட பொலிஸார்

யாழ்.வடமராட்சியில் மண் அகழ்வு இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்ட பொலிஸார்

0

யாழ்.வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் கொள்ளை
இடம்பெற்று வருகிறது.

இந்தநிலையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

மண் அகழ்வு

இதனையடுத்து, தமது கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாகவும் அதனை
தடுத்து நிறுத்துமாறும் ஆழியவளை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மருதங்கேணி
பொலிஸாரிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்றையதினம் (1)  மாலை 03.00 மணி அளவில் கிராமத்திற்கு வருகைதந்த பொலிஸார் கிராம
அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து சட்டவிரோத மண் அகழ்வு
நடைபெறும் இடங்களை பார்வையிட்டனர்.

NO COMMENTS

Exit mobile version