Home முக்கியச் செய்திகள் பொதுமக்களுக்கு காவல்துறையினரின் விடுத்த அவசர எச்சரிக்கை!

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் விடுத்த அவசர எச்சரிக்கை!

0

நாட்டை பாதித்த சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த இடங்களை பார்வையிட பொதுமக்கள் அதிகளவில் வருகைத் தருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வருகைத் தருவது மிகவும் பாதுகாப்பற்ற ஒரு விடயம் எனவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோரிக்கை

இது ஒரு அவதானமான செயற்பாடு என்பதால் சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற இடங்களைப் பார்வையிட வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.

இதேவேளை, சீரற்ற வானிலையால் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களையும் உடனடியாக மீட்டெடுப்பதற்கான அனைத்து பணிகளையும் வீதி மேம்பாட்டு ஆணையம் தற்போது ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version