Home இலங்கை குற்றம் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

0

போலியாக டேடா மற்றும் தொலைபேசி இணைய பெக்கேஜ்கள் வழங்குவதாக தகவல்கள் பரிமாறப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நாடெங்கிலும் தானமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இந்த தானங்களை பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த மோசடி சம்பந்தமான புகைப்படங்கள் சில பகிரப்பட்டுள்ளன.

அதனுடன், உங்கள் தனிப்பட்ட தரவுகள் அல்லது ஒரே முறைக்கு வழங்கப்படும் OTP (One-Time Password) ஆகியவை பிற நபர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்படாத வலைத்தளங்கள் மற்றும் மொபைல் அப்ளிக்கேஷன்களில் எந்தவிதமான தகவல்களும் பகிர வேண்டாம் என பொலிஸார் மேலும் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய மோசடிகள் மூலம் நபர்களின் தனிப்பட்ட தரவுகள் களவாடப்படும் அபாயம், அல்லது நேரடியாக நிதி மோசடியை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, சந்தேகத்திற்கிடமான மெசேஜ்கள், இணைய இணைப்புகள் அல்லது அழைப்புகள் வந்தால் உடனடியாக பொலிஸாரை அல்லது சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version