Home இலங்கை அரசியல் ஆட்சி மாற்றத்தல் கண்ணீர் சிந்தும் அரசியல் தரப்பினர்!

ஆட்சி மாற்றத்தல் கண்ணீர் சிந்தும் அரசியல் தரப்பினர்!

0

பரம்பரை அலகில் இருந்தும் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பல அரசியல் தரப்பினரது அழுகுரல் கேட்கிறது எனவும் குற்றமிழைத்தால் தண்டனை கிடைக்கும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. ஏனைய கட்சிகள் சூன்யமாக்கப்பட்டுள்ளன.

அரசியல் அதிகாரம்

அரசியல் அதிகாரம் குடும்ப அலகில் இருந்தும், பரம்பரை அலகில் இருந்தும் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பல அரசியல் தரப்பினரது அழுகுரல் கேட்கிறது.

நாட்டு மக்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

மக்களின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றார்கள் தற்போது ஒகஸ்ட், டிசெம்பர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தோல்வி மற்றும் அச்சத்தின் வெளிப்பாடே இதுவாகும்.

ஆகவே அரசாங்கத்துக்கு பாரியதொரு சவால் ஏதும் கிடையாது. சூன்யமாக்கப்பட்டுள்ள தரப்பினர் மாத்திரமே ஒன்றிணைந்துள்ளார்கள்.

இந்த நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்.மக்களின் நம்பிக்கை என்ற பாரதூரமான பலம் எம்மிடம் உள்ளது” என கூறியுள்ளாார்.

NO COMMENTS

Exit mobile version