Home இலங்கை அரசியல் தேர்தல் செலவு வரம்பை ஏற்க மறுக்கும் வேட்பாளர்கள்: கம்மன்பில கடும் குற்றச்சாட்டு

தேர்தல் செலவு வரம்பை ஏற்க மறுக்கும் வேட்பாளர்கள்: கம்மன்பில கடும் குற்றச்சாட்டு

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செலவு வரம்புக்ளை மீறி செயற்பட சில கட்சிகள் தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறும்ய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

1.8 பில்லியன் செலவு வரம்புகளை ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பெருமளவு செலவு வரம்புகளை கோரியதாக அவர் கூறியுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமயவால் இன்று (20.08.2024) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார்.

எவ்வாறு பணம் பெற்றார்கள்

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளர்கள் எவ்வாறு பணம் பெற்றார்கள் என்பதை வெளியிடுவது போல, என்றும் இலங்கை வேட்பாளர்கள் அந்தப் பணத்தை எவ்வாறு பெற்றனர் என்பதையும் வெளியிட வேண்டும் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் சார்பாக செலவிடக்கூடிய வேண்டிய செலவின் வரம்பு விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

செலவின வரம்புக

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செலவின வரம்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளரின் சார்பாக ஒரு வேட்பாளர் 109 ரூபாய்க்கு மிகாமல் செலவு செய்ய முடியும் என்றும், அதிகபட்சமாக நூற்று எண்பத்தாறு கோடியே எண்பத்து இரண்டு இலட்சத்து 98,586 ரூபாய் செலவழிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version