Home இலங்கை அரசியல் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 39 வேட்பாளர்களில் ஒருவர் கூட தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் நிலைப்பாட்டை முன்வைக்க தயாராக இல்லை என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஜயசூரிய (Siritunga Jayasuriya) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தல் காலங்களில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்துவதாகவும் 13 வது திருத்த சட்டத்தின் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் தொடர்பில் பேச வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்து விட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என யாருக்குமே இன்னும் எந்த வித தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக மாத்திரமே இந்த மக்களின் பிரச்சினைகளை இவர்கள் கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி, ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஜயசூரிய தெளிவு படுத்திய மேலும் பல விடயங்கள் கீழுள்ள காணொளியில்… 

https://www.youtube.com/embed/V_DJd6FeldY

NO COMMENTS

Exit mobile version