Home இலங்கை அரசியல் சிஐடி முன்பாக பதற்ற நிலை : விரைந்த காவல்துறையினர்

சிஐடி முன்பாக பதற்ற நிலை : விரைந்த காவல்துறையினர்

0

குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு (CID) முன்பாக சற்று முன்னர் மிகவும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இன்று (26) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், நாமல் வாக்குமூலம் வழங்குவதற்காக திணைக்களத்தின் உள்ளே சென்றிருந்த போது வெளியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான ஒரு யூடியூபர் நாமலுக்கு எதிரான காணொளியொன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த யூடியூபர் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்ச குடும்பத்தாரின் அரசியல் குறைகள் குற்றச்சாட்டுக்களை பதிவிட்டு வரும் நிலையில், இன்றும் காணொளியொன்றை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்த நாமல் ராஜாக்சவின் ஆதரவாளர்களுக்கும் குறித்த யூடியூபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்ற சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.         

https://www.youtube.com/embed/6u2HxLZXc90

NO COMMENTS

Exit mobile version