Home முக்கியச் செய்திகள் தேர்தலுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பியோட தயாராக இருக்கும் நபர்கள்…! அம்பலமான தகவல்

தேர்தலுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பியோட தயாராக இருக்கும் நபர்கள்…! அம்பலமான தகவல்

0

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் தேர்தலுக்கு முன்னதாக நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் இந்த நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கங்களின் போது நிதி மோசடிகளில் ஈடுபட்ட, சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட, மனித படுகொலைகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சொத்து விற்பனை

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலர் குறித்த நாடுகளில் வீசா பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் சிலர் தங்களது சொத்துக்களை விற்பனை செய்து பணம் திரட்டிக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பணம் திரட்டியர்கள் சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறையில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://ibctamil.com/article/politicians-gov-employees-fly-abroad-fake-visa-1726457288?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version