Home இலங்கை அரசியல் தேர்தல் தினத்தை அரசியல்வாதிகள் அறிவிக்கக் கூடாது – செய்திகளின் தொகுப்பு

தேர்தல் தினத்தை அரசியல்வாதிகள் அறிவிக்கக் கூடாது – செய்திகளின் தொகுப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தை அரசியல்வாதிகள் அறிவிக்கக்
கூடாது எனவும் அது அரசியலமைப்பின்படி தேர்தல்கள் ஆணையகத்தின் தனிப்பட்ட
விருப்புரிமை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எல்.ஏ.எம் ரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினம் தொடர்பாக சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில்,
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara
Dissanayakke), செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5ஆம் திகதிகளில் வாக்களிப்பு
நடைபெறும் என்று கூறியிருந்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்
வாக்களிப்பதற்காக தாயகம் திரும்ப விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு
அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், ஒக்டோபர் 5ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும்
என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் (Harin Fernando)
தெரிவித்திருந்தார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version