Home இந்தியா இந்தியாவை உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு : வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

இந்தியாவை உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு : வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

0
புதிய இணைப்பு
இந்தியாவில் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருந்த ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கோவை மகளிர் நீதிமன்றம் சற்று முன்னர் பிறப்பித்துள்ளது.
மேற்படி தீர்ப்பு மேல்முறையீடு சென்றாலும் உறுதி செய்யப்படும் என சிபிஐ வழக்குரைஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இந்தியாவில் (India) பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை கோவை (Coimbatore) மகளிா் நீதிமன்றம் இன்று (12) வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கல்லூரி மாணவிகள் 

இந்த வழக்கில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட காணொளிகள் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இது குறித்த வழக்கு பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு பின், சிபிசிஐடிக்கும் அதன்பின் சிபிஐக்கும் மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமாா் ஆகிய ஒன்பது பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சாட்சி விசாரணை

இதன்பின், இவா்கள் மீது கோவை மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 2019 மே 21 ஆம் திகதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னா், நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24 ஆம் திகதி சாட்சி விசாரணை தொடங்கியது.

இதில், அறைக்கதவுகள் மூடப்பட்டு, நிகழ்நிலை (Online) மூலமாக சாட்சியம் பெறப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிா் தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பு மே 13 ஆம் திகதி வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினிதேவி அறிவித்தாா்.

அதிகபட்ச தண்டனை

இந்த பின்னணியில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரையும் மகளிா் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று (13) முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

இந்தநிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

அத்தோடு, இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியிடப்படும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version