இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சில நிமிடங்களுக்கு சற்று முன்னர் நாட்டிலிருந்து இந்தியாவின் புது டில்லிக்கு புறப்பட்டார்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் நேற்று (22) இலங்கை வந்தடைந்தார்.
வழி அனுப்பிய குழு
இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
இந்தநிலையில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரிகள் குழு, சந்தோஷ் ஜா உட்பட, இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழுவும், ஜெய்சங்கரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வழி அனுப்பி வைத்துள்ளனர்.
