Home ஏனையவை ஆன்மீகம் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பொலனறுவை சிவாலயத்தில் சிவராத்திரி பூஜைகள்!

பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பொலனறுவை சிவாலயத்தில் சிவராத்திரி பூஜைகள்!

0

சுமார் 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜைகள் இடம்பெற்றுள்ளன. 

பொலனறுவை இரண்டாம் சிவாலயம் என அழைக்கப்படும் சின் ஆலயத்தில் இன்றைய தினம் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பகல்நேர பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. 

சோழர் காலம் 

இதன்போது, பக்தர்கள் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். 

சோழர் காலத்திற்குப் பின்னர் மீண்டும் கடந்த தைப்பொங்கல் தினத்தன்றே பொலன்னறுவை சிவன் கோயிலில் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டது. 

இந்நிலையில் தற்போது, மஹா சிவராத்திரியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version